உதிரத்து_உறையும்_உணர்வுகள்-தொடர் _2
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 காதலின் வேதனையைக் காவியமாக்கும் இருவேறு காலச்சூழலில் குழலியும் எழிலியும் இணைந்து மிரட்ட வருகிறார்கள் # உதிரத்து உறையும் உணர்வுகளாக .. வாருங்கள் அவர்கள் காதலுக்கு கரம் கொடுப்போம். காதல் சேருமா ? பிரியுமா ? 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 #உதிரத்து_உறையும்_உணர்வுகள் தொடர் _2 களிறென் றொத்தஅ வன்தோள்கள் கடிதென்ப தாகிட வளியொத்த வள்ளலா மவன்செய் கையுயரத் தென்னன் புகழுயர வில்வாள் மற்போர் திறனுயரத் திண்மையான் தோற்றம் விரிசுட ரொப்பவு மொளிரக் கேண்மை கொட்பின்றிச் செயற் கரியன் சேர்புகழ வாழியவே. விரிமார்பன் வியன்மாறன் அச்சம் அறிஇல் ஆதவன் போலுச்சம் பெற்றவன் பொழுதிற் வெற்றி யொன்றே யறிந்தவன் வேல்படை முட்கோ புரமாயினும் வேங்கையாய்த் தாவி வெஞ்சினம் அறுத்துய்து வேழமாய் நின்றான் வெற்றி மாறன். **** வெற்றிமாறனைக் காண ஓலையோடு வந்தான் அமைச்சன் சாண்டில்யன்....